ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க இன்று தனது 56 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மாத்தளை மாவட்டத்தின் கலேவெல எனும் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இவர் பிறந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அனுராதபுரம், தம்புத்தேகமவுக்கு குடி பெயர்ந்தார். தம்புத்தேகம காமினி மகாவித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை கற்றவர், பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஞ்ஞானதுறைக்கு தெரிவானர். இந்த பாடசலையிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவன் இவர் ஆவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்பட்டார். மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அரசாங்கம் விடுத்த தடை காரணமாக மறைந்து வாழ்ந்தவர், பின்னர் அந்த தடை நீங்கியதும் களனி பல்கலைக்கழத்தில் இணைந்து 1995 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பின் தேசிய இணைப்பாளராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 98 ஆம் ஆண்டு மத்திய குழுவுக்கு தெரிவானவர் 2000 ஆம் ஆண்டு தேசிப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 2004 ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் சந்திரிகா அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றார். 2005 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. 2008 மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார். 2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவான இவர், இம்முறை மாற்றம் என்ற மக்களின் கோஷத்துக்கு ஏற்ப ஜனாதிபதியாக தெரிவாக, ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

Social Share

Leave a Reply