
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிப்பதற்கு இன்று(25) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை மேலதிக சலுகைக்காலம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான முதலாம் கட்டத்தின் போது பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கவும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் உரிய விண்ணப்பப்படிவங்களைப் பூரணப்படுத்தி பிரதேச செயலகங்களில் கையளிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் அல்லது நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தமக்கு பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் காணப்படுமாயின் அவை தொடர்பிலும், அதற்கு உரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்று, அவற்றை பூரணப்படுத்தி பிரதேச செயலகங்களில் கையளிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக இன்று(25) முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 455,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் முதலாம் கட்டத்தின் கீழ் 17 இலட்சம் பேருக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.