இன்றைய வாநிலை..!

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களில் 200 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று (25.11) பிற்பகல் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும், தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து 410 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பின் தாக்கத்தினால், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சி பதிவாவதுடன் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply