
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக
மாறியதைத் தொடர்ந்து துணை இராணுவ வீரர்கள் நால்வரும் பொலிஸார் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அண்மையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள
அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.