தென்கொரியாவில் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் அவதானம்

தென்கொரியாவில் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் அவதானம்

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து
வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதியால் அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தளர்த்தப்பட்டுள்ள போதிலும்
போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.

இந்தநிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

தேவையேற்படுமாயின் அங்குள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என
அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply