மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு

மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06.11) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக
இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்தத் தரவுகளின் மீளாய்வு தற்போது நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இறுதிக் கணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார கட்டணத்தைக் குறைக்கும் யோசனையை இலங்கை மின்சார சபை முன்னர் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply