
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (26.12) அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.