போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நீண்டகாலமாக விசாரணை என்னும் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரி முன்னெடுக்கப்படும் கையழுத்து போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப.சத்தியலிங்கம் பங்குபற்றி மகஜரில் கையொப்பமிட்டு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் (28.12.2024) அவர் கையொப்பமிட்டார்.