Kelsey Homes உடன் ஒரு புதிய அத்தியாயம் – பரிமாற்ற பத்திரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது!

Kelsey Homes உடன் ஒரு புதிய அத்தியாயம் – பரிமாற்ற பத்திரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது!

கெஸ்லி ஹோம்ஸ் நிறுவனம், உத்தியோகபூர்வமாக தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்துபரிமாற்றபத்திரத்தை வழங்கி வைத்துள்ளது. இந்த பரிமாற்றம் தமது பயணத்தில் முக்கிய மைற்கல்லை தொட்டுள்ளதோடு, மதிப்புமிகு புதிய சாதனையாகவும் அமைந்துள்ளதாக கெஸ்லி ஹோம்ஸ் மற்றும் ப்ளூ ஒசியன் நிறுவன தலைவர் துமிலன் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திர மாற்றம் வெறும் உரிமை மாற்றமாக மட்டும் இருக்கப்போவதல்ல. இது கனவுகள், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் தொடர்ச்சியாக அமையுமெனவும், இந்த சொத்து, அதன் வளமான வரலாற்றையும் பிரகாசமான எதிர்காலத்தையும், இனி வரும் காலங்களில் புதிய கனவுகளுக்கும் மறக்கமுடியாத நினைவுகளுக்கும் அடித்தளமாக செயற்படுமெனவும் துமிலன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த முக்கிய தருணத்தை கொண்டாடும் அதேவேளை, இதில் பங்களித்த அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும், சட்ட ஆலோசகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரின் தளராத ஆதரவே இச்சாதனையை சாத்தியமாக்கியது எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

இந்த பத்திர மாற்றத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி, இந்த புதிய அத்தியாயம் அனைத்து தொடர்புடையவர்களுக்கும் வளமும் மகிழ்ச்சியும் வெற்றியும் வழங்க தா,தமது நிறுவனம் மனமார்ந்த ஆசிகளை தெரிவிப்பதாகவும் துமிலன் வாழ்த்துக் கூறியுளளார்.

உங்கள் கனவு இல்லத்தை தேர்ந்தெடுப்பது வாழ்நாள் முழுவதற்குமான முக்கியமான முடிவாகும், மற்றும் நீங்கள் நம்பும் கட்டிட வடிவமைப்பாளர்கள் அதில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். Kelsey Homes என்பது வெறும் வீடல்ல; அது ஒரு வாழ்க்கை முறை – நுட்பமான பராமரிப்பு, ஆளுமை மற்றும் 42 வருட பாரம்பரியத்தோடு, நாட்டின் முன்னணி வீட்டு மேம்பாட்டு வளர்ச்சியாளர்களில் ஒன்றாக கெல்சி ஹோம்ஸ் திகழ்கிறது.

Kelsey Developments PLC இன் முழு உரிமைக்குட்பட்ட துணை நிறுவனமான Blue Ocean குழுமத்தின் உறுப்பினராக, Kelsey Homes திகழ்கிறது என்பது சிறந்த தரத்துக்கான உத்தரவாதத்தை வெளிப்படுத்துகிறது.

200-க்கும் மேற்பட்ட வீட்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, 2,000-க்கும் அதிகமான மகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர்களுடன், Kelsey Homes, உயர்நிலை வாழ்க்கைக்கு புதிய வரையறைகளை ஏற்படுத்தி, Gated Housing Development களில் பொற்காலத்தை நிறுவியுள்ளது.

Urban Heights, வத்தளை என்பது ஒரு தனியுரிமை வாய்ந்த நுழைவாயில் சமூகமாகும், இது 16 பிரமாண்டமான வீட்டு அலகுகளை கொண்ட 5-மாடி குடியிருப்பு வளாகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை அழகாக வடிவமைக்கப்பட்ட 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட குடியிருப்புகள் ஆகும், மேலும் வத்தளையில் நிலம் விலை உயர்வுடன், மிகச் சிறந்த சொத்து மதிப்பும் அதிக வருவாய் தரும் முதலீட்டுப் பலனையும் வழங்குகின்றன.

பள்ளிகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்களின் அருகே அமைந்துள்ள வத்தளையின் இதயப்பகுதியில், Urban Heights தனது குடியிருப்பாளர்களுக்கு ஒரு வசதியான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை சூழலை வழங்குகிறது.

இல. 88, Canal வீதி, ஹெந்தலை, வத்தளையில் Urban Heights உடைய பத்திர பரிமாற்ற நிகழ்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களை வழங்கும் மற்றொரு முக்கிய மைல்கல்லை நாம் கொண்டாடுகின்றோம். அழகிய, பாதுகாப்பான மற்றும் அமைதியான வாழ்க்கையை மதிக்கும் ஒரு உயர்வான சமூகத்தின் அங்கமாக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள்!

Kelsey Homes இல் முதலீடு செய்வது சொந்தமாக ஒரு சொத்தை வாங்குவதற்கு மேலானது; இது சிறப்பின் பாரம்பரியத்தில் சேர்ந்து உரிமையின் பெருமையை அனுபவிப்பது.

உங்கள் ஆசைகளை பிரதிபலிக்கும் வீட்டில் வாழும் வாய்ப்பை பயன்படுத்துங்கள். Kelsey Homes உடன், நீங்கள் மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் மனநிம்மதியுடன் நிறைந்த எதிர்காலத்தை பாதுகாக்கிறீர்கள்.

வேறுபாட்டை கண்டறியுங்கள். இன்று Blue Ocean குழுமத்தின் ஒரு பெருமைமிக்க அங்கமான Kelsey Homes குடும்பத்தில் இணைந்திடுங்கள்!

Kelsey Homes உடன் ஒரு புதிய அத்தியாயம் – பரிமாற்ற பத்திரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது!

Social Share

Leave a Reply