அமெரிக்காவின் அதிக வயது வாழ்ந்த ஜனாதிபதி மரணம்

அமெரிக்காவின் அதிக வயது வாழ்ந்த ஜனாதிபதி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 ஆவது வயதில் நேற்று(29.12) அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் காலமானார். விவசாய குடுமபத்திலிருந்து வந்த இவர் சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் என்பது முக்கியமானது. 2018 ஆம் ஆண்டு ஜோர்ஜ் HW புஷ் இறந்த பின்னர் உயிர் வாழ்ந்த அதிக வயதுடைய முன்னாள் ஜனாதிபதி என்ற பெயரை ஜிம்மி கார்ட்டர் பெற்றுக்கொண்டார்.

1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை நெருக்கடியான காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையாற்றியவர் ஜிம்மி கார்ட்டர். அதன் பின்னர் மனித நேய பணிகளில் அதிகம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதன் காரணமாகவே சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது.

“இந்த உலகத்துக்கு மக்கள் அனைவரும் எமது குடும்பம்” என தனது தகப்பன் கூறுவதாகவும், அதன் படியே அவர் வாழ்ந்ததாகவும் ஜிம்மி கார்ட்டரின் மகன் கூறியுள்ளார்.

“ஜிம்மி கார்ட்டட் ஒரு சிறந்த தலைவர். அவர் நாட்டுக்கு நல்ல தலைவராக இருந்த அதேவேளை, மனித நேயம் கொண்ட நபராக வாழ்ந்தவர்” ரென அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply