சீனாவில் மனித வைரஸ் தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொவிட் 19, இன்புலுவன்ஸா A, HMPV, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற தாக்கங்கள் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும், மயானங்கள் நிரம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பலருக்கு சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள அதேவேளை, உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வட மாகாணத்தில் குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த தோற்று நோய்கள் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியாவின் ஆரம்ப கட்டமா என்பது தொடர்பிலும், குளிர்கால சுவாச நோய்களா என்பது தொடர்பிலும் சீன நோய் கட்டுப்பாட்டு அமைப்பு ஆரம்ப கண்காணிப்புகளை ஆரம்பித்துள்ளது. குளிர்காலத்தில் இந்த தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிவக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்ததுள்ளது.