கனேடிய பிரதமர் ஜஸ்டின் டூடே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கட்சிக்குள்ளேயே அடுத்த பிரதமராக தான் தெரிவு செய்யபப்படமுடியாத நிலை காணபப்டுவதனால் தான் பதவியில் தொடர முடியாது எனவும், அடுத்த தெரிவு தான் இல்லை என்ற நிலையிலும் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த பிரதமரை தனது கட்சி தெரிவு செய்யும் வரை பிரதமர் பதவியில் டூடே நீடிப்பார். மார்ச் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றம் கலையவுள்ளது. அதுவரையே ஆகக்குறைந்தது அவர் பதவி நீடிக்க முடியும். ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
“நாடு புதியவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தலில் நான் கட்சிக்குள்ளேயே போட்டிகளை சந்திவேண்டிய நிலை உள்ளது. அடுத்த தேர்தலில் எனக்கான வாய்ப்புகள் இல்லை” என கனேடிய பிரதமர் ஜஸ்டின் டூடே ஊடக சந்திப்பில் தெரிவித்துளளார்.