இலங்கை, அவுஸ்திரேலயா தொடரில் மேலும் ஒரு போட்டி

அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த மாத இறுதியில் வரவுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலும் விளையாடுவதாக இருந்த போதும், தற்போது மேலும் ஒரு ஒரு நாள் சர்வசதேசப் போட்டி ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஹம்பாந்தோட்டையில் விளையாடவிருந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

ஜனவரி 29 தொடக்கம் பெப்ரவரி 02 முதல் டெஸ்ட், காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானம்
பெப்ரவரி 06 தொடக்கம் பெப்ரவரி 10 இரண்டாம் டெஸ்ட் , காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானம்
பெப்ரவரி 12 முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டி, கொழும்பு R.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம்
பெப்ரவரி 14 முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டி, கொழும்பு R.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம்

Social Share

Leave a Reply