இரத்தினப்புரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல்லானது, நட்சத்திர வடிவான நீலமாணிக்கக் கற்களின் கொத்து என்பதை சுவிட்சர்லாந்து உறுதிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருந்து இது உறுதியானதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே நேற்று (08/12) தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சரின் குழுநிலை விவாதம் நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனை தெரிவித்தார்.
குறித்த நீலமாணிக்கல்லை ஏலத்தில் விடவும், அதற்கான உயர்ந்தபட்ச வருமானத்தைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வருடம் இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட்ட ஏழு மாடி கொண்ட ‘மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரம் ‘ எதிர்வரும் வருடம் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.