கண்டி – வத்தேகம – மீகம்மான பிரதேசத்திலுள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் (07/12) காலை 5 பெண் பிள்ளைகள் தப்பிச்சென்றிருந்தனர்.
இந்நிலையில் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். எனினும் ஏனைய நால்வர் குறித்து பொலிஸார் தொடர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதற்கமைய மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தத்தமது சொந்த வீடுகளுக்கே சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மற்றைய இரு பெண் பிள்ளைகளும் தத்தமது சொந்த வீடுகளுக்கோ அல்லது உறவினர் வீட்டிற்கோ சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி வத்தேகம சிறுவர் காப்பகத்திலிருந்து காலையில் பாடசாலை செல்லும் வழியில் குறித்த 5 பெண் பிள்ளைகளும் தப்பிச் சென்றதாக முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற சிறுமிகள் 16 – 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் இதுவரை மூவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இருவரை தேடி தொடர் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.