திரும்பிச் செல்லும் உரக் கப்பல்

இலங்கைக்கு உரம் இறக்குமதி செய்வதற்காக வருகை தந்திருந்த சீவின் பயோடெக் நிறுவனத்தின் 20,000 டொன் உரம் ஏற்றப்பட்ட கப்பல் திரும்பிச் செல்லவுள்ளது.

இலங்கையில் உரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இலங்கையுடன் எந்தவொரு ஆக்கபூர்வமான உடன்பாட்டையும் எட்ட முடியாமல் குறித்த கப்பல் திரும்பிச் செல்லும் பாதையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான உர ஏற்றுமதி ஒப்பந்தம் தொடர்பாக வளர்ந்து கொண்டே செல்லும் சர்ச்சையை தீர்த்து வைப்பதற்காக சர்வதேச நடுவர் நடைமுறையை குறித்த நிறுவனம் நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்காக அக்கப்பல் சிங்கப்பூரை சென்றடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் மத்தியஸ்தம் செய்யப்படும் சர்வதேச நடுவர் நடைமுறை ஒப்பந்தத்தை தொடர்ந்து கொழும்பில் மேலுமொரு நடுவர் நடைமுறையுடனான மத்தியஸ்தம் விரைவில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பிச் செல்லும் உரக் கப்பல்

Social Share

Leave a Reply