இந்திய அணிக்கு இலகு வெற்றி

இந்திய அணிக்கு இலகு வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா ஈடின் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்களினால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. தனித்து நின்று போராடிய ஜோஸ் பட்லர் 68(44) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஹரி ப்ரூக் 17 ஓட்டங்கள். 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டது. இந்தியா அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும், அர்ஷீப் சிங், அக்ஷர் பட்டேல், ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. இதில் அபிஷேக் ஷர்மா 79(34) ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 26(20) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜொப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 5 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply