கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர் சுங்க அதிகாரிகளால் இன்று (31.01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 46 வயதுடையவர்கள் என்பதுடன் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 300 கரட் நிறையுடைய புஷ்பராகம் மற்றும் நீலகுருவிந்த வகையைச் சேர்ந்த 54 இரத்தினக் கற்களைக் கண்டுபிடித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் திலினி பீரிஸின் அறிவுறுத்தலின் பேரில், விமான நிலைய துணை சுங்கப் பணிப்பாளர் ரோஹன் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.