விராத் கோலி 12 வருடங்களின் பின்னர் இன்று ரஞ்சிக்கிண்ண போட்டியில் களமிறங்கினார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரின் துடுப்பாட்டத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர். இருப்பினும் அவர் இன்று ஏமாற்றிவிட்டார். 6 ஓட்டங்களுடன் ஹிமன்ச்சு சங்வானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். போல்ட் செய்யபப்ட்ட கோலியின் விக்கெட் தூக்கி வீசப்பட்டு பறந்து சுழன்று வீழ்ந்தது.