அநுராதபுரம் ஹபரணை கல்வங்குவ பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 35 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வேனின் சாரதியும்இ பஸ்ஸில் பயணித்த ஒருவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.