அம்பலாந்தோட்டை, மா மடல பகுதியில் இன்று (02.01) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றிற்குள் நுழைந்த அறுவர் மூன்று பேர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.