சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு சந்திரசேகரன் அனுதாபம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு சந்திரசேகரன் அனுதாபம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி அவர்களுடைய மறைவு பெரும் வேதனையளிகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர், தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் அச்சு ஊடகத்துறையில் 40 வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள பாரதி தனது எழுத்தாற்றல் மூலம் தனக்கென தனித்துவமான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

அரசியல், பொருளாதாரம் என சகல துறையிலும் சிறந்த ஆக்கங்களை வெளியிட்டவர். நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் எழுத்தாயுதம் ஏந்தி போராடிய ஒரு ஊடக போராளியாகவே நான் அவரை பார்க்கின்றேன். பாரதி அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply