கிண்ணியா நகர சபை தவிசாரளருக்குப் பிணை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (10/12) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் மிதப்பு படகு கவிழ்ந்ததில், படகினை இயக்கிய 3 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிண்ணியா பொலிஸாரினால் இழுவை படகில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் நான்காவது சந்தேக நபராக குற்றம் சுமத்தப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த தவிசாளர் சுகவீனமுற்ற நிலையில் தினசரி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளரை பிணையில் விடுவிக்கவும், எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் பயாஸ் ரசாக் உத்தரவிட்டார்.

கிண்ணியா நகர சபை தவிசாரளருக்குப் பிணை

Social Share

Leave a Reply