ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ இரண்டு மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூர படுகொலைக்குள்ளான பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு இன்று (10/12) நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இந்த நன்கொடையை வழங்கினார்.
நிதி நன்கொடைகளுக்கு மேலதிகமாக, பிரியந்தவின் பிள்ளைகளில் ஒருவரின் கல்விக்காக பயன்படுத்தப்படும் மடிக்கணினியொன்றையும் அவர் வழங்கினார்.