ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு சுனில் ஹந்துன்நெத்தி விஜயம்

வடக்குக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டு ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.

முதலாவதாக ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தியின் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

நவீன இயந்திரங்கள் கொண்டு அடுத்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள உப்பு உற்பத்தி செயற்பாட்டின் முன்னேற்றத்தினையும் பார்வையிட்டதோடு உப்பு உற்பத்தி செய்யும் இடங்களையும் பார்வையிட்டார்.

அமைச்சருடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன்,எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோரும் தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், உதவிமாவட்டச்செயலர்,கண்டாவளை பிரதேச செயலாளர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிக்கு சென்று தொழிற்சாலையின் மீள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிருந்தார்.

Social Share

Leave a Reply