மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேக நபர் கைது

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்டிகல-பதலங்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குட்டிகல-பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தம் 18 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த அருண விதானகமகே அவரது மகன் மற்றும்
மகள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் உயிரிழந்தனர்.

இந்த கொலை தொடர்பில் தற்போது வரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply