நாட்டின் சில பகுதிகளுக்கு மீண்டும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளமையின் காரணமாக, அது தேசிய மின் வழங்கல் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆகையால் எதிர்வரும் நாட்களில் தினசரி மாலை 6.30 தொடக்கம் இரவு 09.30 மணி வரை 30 நிமிட மின் வெட்டு இடம்பெறுமென மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
