அக்மீமன பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பலி

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (13.03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிதத் தம்மிக தனது வீட்டிற்கு அருகில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வருகைதந்த போது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலை மற்றும் மார்பில் பல தோட்டாக்கள் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர் தப்பிச் சென்ற நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிதத் தம்மிக, பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

இவர் சிறைச்சாலை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply