இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹோட்டல, தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னராக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹோட்டலவிடமிருந்தும், குழு உறுப்பினர்களிடமிருந்து இராஜினாமா கடிதத்தை ஏற்க ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சஞ்சய மொஹோட்டல மீண்டும் ஜனாதிபதியை சந்தித்து தனது இராஜினாமா குறித்து கலந்தாலோசித்துள்ளதாக அறியமுடிகிறது.
