சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17.03) ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கு 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply