இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாக சுட்டிக்காட்டினார்.