தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியை அங்கத்துவப்படுத்தும் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.