சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தகுதியுடைய பயனாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை 2,500 ரூபாவுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்த உணவுப் பொதிளை பெற்றுக்கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.