தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு

தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பேதைப்பொருள் சுமார் 124 கிலோ 392 கிராம் நிறையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply