உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் இளவரசி’ எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்க கற்பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் அது 310 கிலோ எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரி மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்து கண்டிபிடிக்கப்பட்டு அண்மையில் பரிசோதனை ரீதியாக அது அதிக வருமானம் ஈட்டக்கூடிய சாதகத் தன்மையை வெளிக்காட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.