கொரோனா வைரஸ் திரிபினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், சகல பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது 25 சதவீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பிட்ட சில பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள காரணத்தினால், அவர்களை மீளவும் அழைக்கின்றமையால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.