தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 413 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளாதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 382 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரச அதிகாரிகளின் தகவல் கணக்கெடுப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply