ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையே நேற்று (03.04) கலந்துரையாடல் நடைபெற்றது.
பல ஆசிய நாடுகள், பொருளாதார ஊழல்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் இலங்கை முன்னேற்றம் கண்டு வருவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவற்றுடன், இலங்கையின் விளையாட்டு துறையும் சிறந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, கால்பந்தாட்டத்தின் முன்னேற்றத்திற்காக விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை நாட்டில் அமைப்பதற்கான தனது ஒப்புதலை அவர் தெரிவித்துள்ளார்.