நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும், மீட்பு பணிகளுக்கு உதவி செய்வதற்காகவும் முப்படையினரை ஏற்றிச் செல்லும் முதல் சிறப்பு விமானம் இன்று (05.04) மியான்மார் நோக்கி பயணிக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த குழுவில், ஒரு மருத்துவக் குழு, ஒரு மீட்புக் குழு மற்றும் ஒரு நிவாரணக் குழு அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மூன்று குழுக்கள் மியன்மார் நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.