இரவு விடுதியில் கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பில் டொமினிகன் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும் குறித்த விபத்து தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் குழு தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் இசை நிகழ்ச்சியொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
4,500 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.