நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும்
என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன்
அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply