களுத்துறை – அலுத்கம பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை (18.04) இடம்பெற்றுள்ளது.
நகைகள் மற்றும் மரத்திலான அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்திலேயே இவ்வாறு தீப்பரவியுள்ளது.
குறித்த கட்டிடத்தில் குடியிருப்பு பகுதியொன்றும் இருந்துள்ளது. எவ்வாறாயினும் தீ விபத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.