ஆசிய தடகள சாம்பியன்ஷிப்; இலங்கைக்கு பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025-ல் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று (18.04) நடைபெற்ற போட்டியில் 2 நிமிடம் 14.86 செக்கனில் 800 மீட்டர் தூரத்தை அவர் பூர்த்தி செய்தார்.

இதேவேளை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025-ல் ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் ஷவிந்து அவிஷ்கா 1:53.41 நேரத்தில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் உயரம் பாய்தல் போட்டியில் பவன் நெத்யா சம்பத், வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் 2.03 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

Social Share

Leave a Reply