மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று(23.04) காலை வத்திக்கான் பயணமானார்.

உயிரிழந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காகவும் புதிய பாப்பரசரின் தெரிவில் பங்குபற்றுவதற்காகவும் கொழும்பு பேராயர் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்.

இதனிடையே, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடலுக்கு இலங்கை நேரப்படி இன்று(23.04) பிற்பகல் 2.30 முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை(21.04) உயிரிழந்தார்.

Social Share

Leave a Reply