பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இந்தியா

இந்தியாவின் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன,

01.இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.

02.சிந்து நதி ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

03.இந்தியாவின் பாதுகாப்பு, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள்.

04.பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அடுத்த மாதம் முதலாம் திகதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்.

05.பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும்.

06.பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படும்.

07.சுற்றுலா விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்.

08.சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

09.பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை.

10.மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply