சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவுக்கும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டின் கீழ், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஊடாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு இந்த மதிப்பாய்வுக்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.