காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வரும் கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.
10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் விபரங்கள் வருமாறு:
பெயர் : திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும்
வயது : 10
பெயர் : ஜயசேகர முதலிகே அகில தேதுணு
வயது : 12
இச்சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் நிலையம்
071 8591634,
033 2240050,
033 2272222
