கனேடிய பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி

2025 ஆம் ஆண்டு கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கனேடிய பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று திங்கட்கிழமை (28.04) நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர், மூன்று பேர் லிபரல் கட்சியிலிருந்தும், இரண்டு பேர் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்தும், ஒருவர் பசுமைக் கட்சியிலிருந்தும் போட்டியிட்டனர்.

இதில், லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றனர். ஓக்வில் கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க் தொகுதியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, பிக்கரிங்-புரூக்ளின் தொகுதியைச் சேர்ந்த ஜூனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி அதிக இடங்களைப் பெற்று சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பதால், அனிதா ஆனந்த் மற்றும் ஹரி ஆனந்தசங்கரிக்கு மீண்டும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply