கைது செய்யப்படுவாரா சமல் ராஜபக்ச? – வெளிவரும் தகவல்!

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றிய சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022ம் ஆண்டு மே 9ம் திகதியன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது திஸ்ஸமஹாராமாவின் உள்ள தனது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலியான தகவலை அளித்து அரசாங்கத்திடமிருந்து மோசடியாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை காரணம் காட்டி முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து இருபத்திரெண்டாயிரத்து அறுநூறு ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply