கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொகோட்டாவிலிருந்து கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் (105 மைல்) தொலைவில் உள்ள மத்திய கொலம்பியாவின் பராடெபுவெனோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கி சைரன்கள் ஒலித்ததால், மக்கள் பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.